15699. காலம் நேர்த்தியாய் நகருதே

1 காலம் நேர்த்தியாய் நகருதே,
மரணம் வருதே நெருங்கியே,
பாவம் உணர்ந்து வாராயோ?
காலமும் மரணமும் உணர்த்துதே
காலமும் நேரமும் உணர்த்துதே.

2 வாழ்வும் நேர்த்தி முடிவினிலே,
மீண்டும் திரும்ப வருவதில்லை,
நித்தியத்தை சந்திக்க,
தீவிரமாய் இருப்பாயா?
தீவிரமாயிருப்பாயா?

3 மோட்ச வாழ்வு மிக நிஜமே,
உன்னை நோக்கி குரல் தருதே,
மாயும் மனிதா மகிழ்ச்சியோ?
நாளும் வீண் உன் வாழ்வினிலே,
நாளும் வீண் உன் வாழ்வினிலே.

4 நரகம் நிஜமே நெருங்கிடுதே,
நெஞ்சை நெருங்கும் வெந்தணலே,
ஐயோ அழிவாய் திரும்பாவிடில்,
இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால்,
இரட்சிப்பின்றி நீ இருந்திட்டால்.

5 நேர்த்தி நம் ஆண்டவர் வீழ்ந்து ஜெபி,
இன்னும் காலம் சென்றிடுதே,
தீர்ப்பின் ஆசனம் நேர்த்தியே,
மன்னிப்பின் காலம் இனி இல்லை,
மன்னிப் பின் காலம் இனி இல்லை.

6 நேசர் இயேசு அழைக்கிறார்,
உனக்காய் தம்மையே தந்தாரே,
உதறிடுவாயோ? அவர் அன்பை,
மேலிருந்து தந்தார் உனக்காக,
மேலிருந்து தந்தார் உனக்காக.

7 கேடுக்கெட்டோடி விலகியே நீ,
அசட்டை செய்தே, இறை மகனை
மதிகெட்ட பாவி நீ திரும்பிடாயோ?
தேவ கோபத்தாலே நீ அழிவாய்,
தேவ கோபத்தாலே நீ அழிவாய்.

8 உன் சிற்றின்ப ஆசைகள்,
உன்னை மீட்டு காக்குமா?
திக்கற்று நீயும் தனியனாய்,
திரிந்தும் எங்கும் ஏகிடாயே,
திரிந்தும் எங்கும் ஏகிடாயே.

9 சுற்றி நீ திரிந்தால், ஊக்கமின்றி,
அழிவாய் கவனம், மனந்திரும்பு,
எழுந்து நீ ஓடு காத்திராதே,
மீட்பர் உனக்காய் அங்கே பார்,
மீட்பர் உனக்காய் அங்கே பார்.

Text Information
First Line: காலம் நேர்த்தியாய் நகருதே
Title: காலம் நேர்த்தியாய் நகருதே
English Title: Time is earnest, passing by
Author: Sidney Dyer
Translator: S. John Barathi
Meter: 77.77
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: HENDON
Composer: Henry Abraham Cesar Malan
Harmonizer: Lowell Mason
Meter: 77.77
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us