| 15726 | The Cyber Hymnal#15727 | 15728 |
| Text: | சென்று உன் துக்கம் புதைத்திடு |
| Author: | Mary A. Bachelor |
| Translator: | S. John Barathi |
| Tune: | [சென்றுன்துக்கம் புதைத்திடு] |
| Composer: | Philip Paul Bilss |
| Media: | MIDI file |
1 சென்றுன்துக்கம் புதைத்திடு,
உலகின் பங்கும் உண்டு,
யாரும் காணாது ஆழியில்,
சிந்தித்திடமைதியாய்,
இயேசுவிடம் சொல்லிடு நீ
இருளின் மறைவிலே,
இயேசுவிடம் சொல்லிடு நீ
எல்லாம் சரியாகும்.
2 இயேசுவிடம் சொல்லிடு நீ,
உன் துக்கம் அறிவாரே,
இயேசுவிடம் சொல்லிடு நீ,
உன் துக்கம் தீர்ப்பாரே,
அவர் தரும் ஒளியது,
உனக்கு வழிகாட்டும்,
உன் பாரம் சுமப்பாரே,
நன்று ஜெபித்திடு.
3 உன் வேதனைபோலவே,
மேலும் பலர்க்குண்டு,
திக்கற்றோர்க்கு ஆறுதல்
சொல்லிடு இனிமையாய்,
உன் துக்கத்தை புதைத்திடு
மற்றோர்க்கு ஆசி கூறு,
நீ பிறர்க்கு ஒளிதந்து,
இயேசுவிடம் சொல்லிடு.
| Text Information | |
|---|---|
| First Line: | சென்றுன்துக்கம் புதைத்திடு |
| Title: | சென்று உன் துக்கம் புதைத்திடு |
| English Title: | Go bury thy sorrow, the world hath its share |
| Author: | Mary A. Bachelor |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [சென்றுன்துக்கம் புதைத்திடு] |
| Composer: | Philip Paul Bilss |
| Incipit: | 11766 66544 44653 |
| Key: | B♭ Major |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |