| 15654 | The Cyber Hymnal#15655 | 15656 |
| Text: | என் இயேசுவே உம்மை நேசிக்கிறேன் |
| Author: | William R. Featherston |
| Translator: | S. John Barathi |
| Tune: | [நீர் என் சொந்தம் இயேசுவே] |
| Composer: | Adoniram Judson Gordon |
| Media: | MIDI file |
1 நீர் என் சொந்தம் இயேசுவே
நான் உம்மை நேசிக்கிறேன்,
என்பாவ சிற்றின்பம் நான் வெறுத்திடுவேன்,
என் மீட்பரே தயவுள்ள இரட்சகரும் நீரே,
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும், எப்போதும்.
2 நான் நேசிக்குமுன்பே நீர் நேசித்தீரே,
சிலுவையில் மாண்டே மன்னிப்பீந்தீரே
முள் கிரீடம் எனக்காக, அணிந்தீர் என் ஸ்வாமி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.
3 நான் வாழ்ந்தாலும் நேசிப்பேன்
நான் மாண்டு போனாலும்,
என் சுவாசம் நீர் தரும்வரை உம்மை நேசிப்பேன்,
என் கண் மூடி சாக நான் காத்திருக்கும் போதும்
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.
4 வான் வீட்டில் என்றும், மகிமை பேரின்பமே,
நான் அங்கும் நின்றும்மை, ஒளியில் துதிப்பேன்,
நல் ஜீவ கிரீடம் சூடி ஆனந்தித்தே பாடி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.
| Text Information | |
|---|---|
| First Line: | நீர் என் சொந்தம் இயேசுவே |
| Title: | என் இயேசுவே உம்மை நேசிக்கிறேன் |
| English Title: | My Jesus, I love Thee, I know Thou art mine |
| Author: | William R. Featherston |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [நீர் என் சொந்தம் இயேசுவே] |
| Composer: | Adoniram Judson Gordon |
| Key: | F Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |